கொடைக்கானல் போல் மாறிய சென்னை… சாலையை மூடிய பனி.!
சென்னையில் காலை 8 மணி ஆகியும் பனிப் பொழிவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றர்.
சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புறநகர் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு உள்ளதால், வாகன ஓட்டிகள் சாலைகள் தெரியாமல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது.
தெருக்களில் எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவிற்கு பனிப்பொழுவு உள்ளதால், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காலை 8 மணி ஆகியும் பனிப் பொழிவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றர். குறிப்பாக, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் பனி முட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர்.
இப்படி இருக்கையில், சென்னையில் திடீர் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கியுள்ளாகியுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.