சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு மருந்து கடை ஒன்றில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது, பல்வேறு இடங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை செய்ததாக காவல்துறையினரின் விசாரணையில் லொட்டை மதன் என்ற திருடன் ஒப்புக்கொண்டுள்ளான். வடசென்னையின் பிரதான பகுதிகளான புளியந்தோப்பு, எம்.கே.பி நகர், ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பது போன்ற தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தவன்னம் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்.கே.பி நகர் காவல் உதவி ஆணையர் திரு. ஹரிகுமார் அவர்கள், தனிப்படை ஒன்றை அமைத்து குற்றம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை வைத்து அந்த குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேடுதல் வேட்டையில், சென்னை ஓட்டேரி சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மதன் என்கிற லொட்டை மதனை (19) தனிப்படை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். காவலர்கள் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னையில், பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி, எம்கேபி நக,ர் வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனது திருட்டை அரங்கேற்றியுள்ளதாக ஒப்புக்கொண்டார். இந்த திருட்டுகளை தனியாகவும் தன், நண்பர்களோடும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் தாக்கியும் செல்போன் மற்றும் பணத்தை பறித்து வந்ததது தெரிய வந்தது. அதேபோல சென்னை வியாசர்பாடியில் உள்ள மருந்து கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களை அவர் செய்ததாக விசாரணையில் லொட்டை மதன் ஒப்புக்கொண்டார்.
மேலும், இவர் மீது வட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவரிடமிருந்து உயர் ரக திருட்டு இருசக்கர வாகனம், மூன்று கத்திகள், பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் ரொக்கப்பணம் 7 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் இவருக்கு திருட்டில் உதவிய லொட்டை மதனின் நண்பரான இட்டா விஜய் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…