புதுச்சேரி அருகே திருக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம் என்பவர், அதே பகுதியில் பெட்டி கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது பெட்டி கடை அருகே உள்ள முடி திருத்தும் கடைக்கு 3 இளைஞர்கள் முடி திருத்தம் செய்ய வந்துள்ளனர். அப்போது அவர்களை 30 நிமிடம் காத்திருக்குமாறு முடி திருத்துபவர் கூறியிருக்கிறார். இதனையடுத்து அந்த இளைஞர்கள் கடை அருகே அமர்ந்துகொண்டு சிகரெட் பிடித்துள்ளனர்.
அப்போது பெட்டி கடையிலிருந்த திருஞானம் இங்கு சிகரெட் பிடிக்கக்கூடாது என எச்சரித்துள்ளார். இதனால் இளைஞர்களுக்கும், திருஞானத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த இளைஞர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திருஞானத்தை வெட்ட முயன்றார். அதனை அவர் தடுக்க முயன்றபோது, வலது கையில் பெரிய வெட்டு விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்து கீழே விழுந்தார். திருஞானத்தின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலேயே கடை வைத்துள்ள திருஞானத்தின் தம்பி உமாபதி சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடி வந்தார்.
அங்கு தனது அண்ணன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் திருஞானத்தை தாக்காமல் இருக்க உமாபதி தடுக்க முயன்றார். ஆனால் அந்த இளைஞர் அவரையும் கத்தியால் வெட்டினார். பின்னர் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றனர்.எனினும் அவர்கள் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, வியாபாரிகளை வெட்டிவிட்டு தப்பியோடிய இளைஞர்களை சீர்மிகு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடை வீதியில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…