#இளமதி_எங்கே ? ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் ! காரணம் என்ன ?
செல்வன் என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடியை சேர்த்தவர் ஆவார்.அதே மாவட்டத்தில் குருப்பநாய்க்கம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் இளமதி.இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 9-ஆம் தேதி சேலத்தில் இருவருக்கும் திராவிடர் விடுதலை கழகம் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.திருமணம் நடத்தி வைத்த பின்னர் அந்த ஜோடியையும்,திராவிடர் விடுதலை கழகத்தினரையும் மர்ம கும்பல் ஓன்று கடுமையாக தாக்கி அந்த பெண்ணை கடத்தி சென்றது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இளமதி காணாமல் போய் 4 நாட்களுக்கு மேலாகியும் போலீசாரால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் #இளமதி_எங்கே என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இப்படி ஒரு ஜாதி வெறி பிடித்த ஜெனரேஷன் இதற்கு முன் தமிழ்நாட்டில் இருந்திருக்குமா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
சமூகவலைத்தளங்கள் எங்கும் ஜாதி வெறி பிடித்த சைக்கோக்களின் பதிவுகள் நிரம்பி வழிகிறது #இளமதி_எங்கே pic.twitter.com/gedKEqtR4c
— Algebra (@Algebraiway) March 14, 2020
5 நாட்கள் ஆகியும் தன் கணவனிடமிருந்து சாதி வெறியர்களால் கடத்தப்பட்ட பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுவா ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான போலீசு??? இல்ல இல்ல.#Whereis_ilamathi #இளமதி_எங்கே
— Kiruba KD (@KirubaKD2) March 14, 2020