சேரி சர்ச்சை… குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.! 

NCW Member Khushbu

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான்  ஒரு  தனியார் செய்தி நேர்காணலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டு இருந்தார். அப்போது ஒரு பதிவில் என்னால் சேரி மொழியில் பேச முடியாது என குறிப்பிட்டு இருந்தார்.

குஷ்பூ கூறிய இந்த வார்த்தைகள் தமிழகத்தில் பேசு பொருளாக மாறியது. சேரி மொழியில் பேச முடியாது என கூறி, அங்கு வாழும் மக்களை கொச்சைப்படுத்திவிட்டார் என குஷ்பூ மீது கண்டனங்கள் குவிந்தன. குஷ்பூ மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும்,, பாஜக ஆதரவாளருமான குஷ்பு வீட்டின் முன்பு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவினர் போராட்டம் நடத்தினர்.  குஷ்பூ வீட்டின் முன்  போராட்டம் நடத்திய தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்களை சென்னை காவல்துறையினரால் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்