ஸ்லோகன் வைத்து பேசுவது அரசியலுக்கு பொருந்தும், ஆனால் செயல்பாட்டுக்கு பொருந்தாது – நிதியமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் நடைபெற்ற GST கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பேட்டி.

தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக விவாதம்:

gstcouncil18

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் 49-வது ஆலோசனை கூட்டம் இன்று புதுதில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்ப்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த நிலையில், GST கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

தீர்ப்பாயங்களுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு:

மாநில அளவில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க 13 மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முக்கியமான ஒன்று. ஆனால், ஒப்புதல் முழுமையக வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை விடுவிப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது. தணிக்கை அறிக்கை அடிப்படையில் 2020-21ம் ஆண்டுக்கான ரூ. 4,230 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஸ்லோகன்:

ஒரே நாடு, ஒரே வரி என்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரே நாடு, ஒரே சட்டம் என்றிருக்கும்போது ஏன் இதனை நீதிமன்றங்கள். ஒரே நாடு, ஒரே வரி என்பது போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம். ஆனால், அதை செயல்படுத்துவது கடினம், ஸ்லோகன் வைத்து பேசுவது அரசியலுக்கு பொருந்தும். ஆனால் செயல்பாட்டுக்கு பொருந்தாது என விமர்சித்தார். மாநிலங்களின் உரிமை காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் ஒரே நாடு, ஒரே வரி திட்டம் சாத்தியமாகும் எனவும் குறிப்பிட்டார்.

மாநிலங்களுக்கு கூடுதல் உரிமை:

மேலும், இழப்பீடு குறித்த விவாதமும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடைபெற வேண்டும் ஈன வலியுறுத்தினார். ஜிஎஸ்டி கவுன்சிலை கூட்டாட்சி தத்துவத்தில் நடத்த விரும்பினால் இன்னும் பல மாற்றங்கள் தேவை என்றும் ஜிஎஸ்டி தீர்ப்பாயம் அமைத்தால் உறுப்பினர்களை நியமிப்பதில் மாநிலங்களுக்கு கூடுதல் உரிமை வழங்க வேண்டும் எனவும் கூறினார். எனவே, மாநிலங்களின் கீழ் செயல்படும் வகையில் தீர்ப்பாயங்கள் அமைக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

30 minutes ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

42 minutes ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

1 hour ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

1 hour ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

1 hour ago

ஏலியன்களால் கடத்தல்? 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…

2 hours ago