தூத்துக்குடியில் தமிழிசைக்கு எதிரான முழக்கம்..! மாணவிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக தமிழக மாநில தலைவராக, தற்போதைய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பில் இருந்தார். அப்போது அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் தமிழிசை பயணித்தார். உடன் பயணித்த சக பயணியான மாணவி லூயிஸ் சோபியா தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசைக்கு எதிராகவும் , மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்
இதனால் மாணவி சோபியா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , நான் 2018ஆம் ஆண்டு அப்போதைய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் விமானத்தில் பயணித்தேன்.
அப்போது நான் மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழிசை சௌந்தராஜனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினேன். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டினர். என் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என சோபியா , மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மாணவி மேல் பதியப்பட்ட வழக்கனது. சென்னை போன்ற பெரு நகரங்களில் பதியப்படும் வழக்கு பிரிவாகும். இதனை தூத்துகுடியில் பயன்படுத்த முடியாது என வாதிட்டனர் . இந்த வாதத்தை ஏற்று மாணவி லுயிஸ் சோபியா மீதான வழக்கை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி தன்பால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.