முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேன்மீது செருப்பு விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.
அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வகையில் அதிமுக கூட்டணியில் தமாக கட்சி உள்ளது.இந்த கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஒரத்தநாட்டில் தஞ்சாவூர் மக்களவை தொகுதி வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் முதலமைச்சர் பழனிசாமி. திடீரென அங்கிருந்த கூட்டத்தில் இருந்து ஒரு செருப்பு பறந்து வந்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேன்மீது விழுந்தது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.மேலும் செருப்பு வீசிய நபர் குறித்து காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…