அவதூறு பேச்சு! ‘பிரியாணி மேன்’ என்கிற யூடியூபர் அபிஷேக் ரபி கைது!

சென்னை : யூடியூப் மூலம் பிரபலமாகி அவர்கள் தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி தான் கடந்த ஒரு வாரங்களாக பெரிய அளவில் பேசப்பட்ட பெயர் ‘பிரியாணி மேன்’ தான். இவருடைய நிஜ பெயர் அபிஷேக் ரபி. யூடியூபில் ‘பிரியாணி மேன்’ என்ற பெயரில் சேனல் ஒன்றை நடத்தி அதில் வீடியோக்களை வெளியீட்டு வருகிறார். யூடியூபில் இவருக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர் இருக்கிறார்கள்.
அபிஷேக் தனது யூடியூப் சேனலில் மற்ற யூடுயூபர்களை பற்றி தரைகுறைவாக பேசி அந்த வீடியோவை வெளியீட்டு வந்தவர். குறிப்பாக, இர்பான் மற்றும் டெய்லர் அக்கா குறித்து பேசி வீடியோ வெளியீட்டு இருந்தார். மேலும், இவருடைய பெயர் ஒரு வாரத்தில் அதிகமாக பேசப்பட்ட காரணம் என்னவென்றால், யூடியூபில் நேரலை போய்க்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென அபிஷேக் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தது தான்.
தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த போது, சரியான நேரத்தில் அவருடைய தயார் கதவை தட்டி அபிஷேக் உயிரை காப்பாற்றினார். திடீரென தற்கொலை செய்து கொள்ள அபிஷேக் முயற்சி செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி பேசும்பொருளானது.
இந்த சூழலில், யூடுயூபர் அபிஷேக்கை இன்று சென்னை சைபர் கிராம் போலீசார் கைது செய்தனர். பெண் ஒருவர் தன்னைப்பற்றி அபிஷேக் அவதூறு பேச்சு பேசியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிராம் போலீசார் கைது செய்துள்ளனர்.