அண்ணாமலை மீது அவதூறு..! காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக புகார்..! 

Default Image

அண்ணாமலை மீது அவதூறு பரப்புவதாக காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசி வருவதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். முன்னதாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி கட்சியில் விலகிய காயத்ரி ரகுராம், தொடர்ந்து அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் காயத்ரி ரகுராம் அவதூறு பரப்பி வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தமிழக பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இன்றும் கூட 2ஜி ஊழல் பற்றி அனைவருக்கும் தெரியும், முந்தைய திமுக ஆட்சி பற்றி அனைவருக்கும் தெரியும். இப்போது ஏன் கதையை மாற்றுகிறீர்கள்.? ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக மற்றும் அனைவரின் சொத்து ஊழல் பட்டியலை கொடுக்க போகிறீர்கள் அது தான் உங்கள் கதை என்று விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்