கொந்தகை அகழாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் எலும்புக்கூடுகள்.. மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!
கீழடி, கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
கொந்தகைகயில் நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 5 குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடுகள் கண்டு எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, முதுமக்கள் தாளிகளும் கண்டெடுக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை இரண்டு குழந்தைகளின் முழு எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டன. அதில் ஒரு எலும்பு, 1.05 மீட்டர் அளவும், மற்றொரு எலும்பு கூடு 0.65 மீட்டர் அளவில் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த எலும்புக்கூடுகளை மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் ஆய்வுக்காக எடுத்து, அதனை ஆய்வு செய்த பின்னர் எந்த ஆண்டைச் சேர்ந்தவை, எலும்புகளின் பாலினம், வாழ்க்கை முறைகள் குறித்து தெரியவரும் என தெரிவித்தார்.