உள்துறை செயலாளராக பொறுப்பேற்றார் எஸ்.கே.பிரபாகரன் – டிஜிபி,காவல் ஆணையர் வாழ்த்து
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.கே.பிரபாகரன் ஐஏஎஸ்.இவர் நெடுசாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலராக இருந்தவர் .பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர்.உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி ஒய்வு பெற்றார் .இதனை அடுத்து தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர் தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரன் பொறுப்பேற்றுக் கொண்டார் .சென்னை தலைமை செயலகத்தில் எஸ்.கே.பிரபாகரனை நேரில் சந்தித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.