அறுபது ஆண்டுதேர்தல் களத்தில் வீழ்த்த முடியாத அரசியல் அதிசயம்! – பீட்டர் அல்போன்ஸ்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக அறிவித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பீட்டர் அல்போன்ஸ்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அறுபது ஆண்டுதேர்தல் களத்தில் வீழ்த்த முடியாத அரசியல் அதிசயம்! மாநிலங்கள் கிளைகளல்ல, வேர்கள் என்று முழங்கிய போர் முரசம்! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”என்ற வள்ளுவத்தினை அரசியல் முழக்கமாக முன்வைத்த சமூகநீதி காவலர்! பிறந்த நாள் அரசு விழா! முதல்வருக்கு நன்றி!’ என பதிவிட்டுள்ளார்.
அறுபது ஆண்டுதேர்தல் களத்தில் வீழ்த்த முடியாத அரசியல் அதிசயம்!
மாநிலங்கள் கிளைகளல்ல,
வேர்கள் என்று முழங்கிய போர் முரசம்!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”என்ற வள்ளுவத்தினை அரசியல் முழக்கமாக முன்வைத்த சமூகநீதி காவலர்!
பிறந்த நாள் அரசு விழா! முதல்வருக்கு நன்றி!@arivalayam pic.twitter.com/Zsv5pahNHY— S.Peter Alphonse (@PeterAlphonse7) April 26, 2022