ஒரே நாளில் ஆறு அரசுப்பள்ளிகள் இழுத்து மூடல்! தமிழக அரசு அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினம் மட்டும் ஆறு அரசுப் பள்ளிகளை தமிழக அரசால் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் மலை கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 22 வகையான பொருட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டும், அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் இவ்வளவு குறைவான நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.