பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்!

பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள காசி என்பவர், சமூக வலை தளங்களில் உள்ள பெண்களை குறிவைத்து காதலிப்பது போல் நடித்து அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, இவர் மீது 5 பெண்கள் உட்பட 6 பேர் புகார் அளித்திருந்த நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட காசியை, கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அளித்த மனுவின் அடிப்படையில், மேலும் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி வழங்கி நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, காசியை சென்னை, பெங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று அங்கு போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025
மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
March 19, 2025