சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், செங்கல்பட்டு சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட சிவசங்கர் பாபா மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இன்று காலை முதல் சிவசங்கர் பாப்பாவுக்கு உடந்தையாக இருந்த பெண் பக்தர்கள் சுஷ்மிதா, நீராஜ் கருணாவிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சுஷ்மிதா பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்துச் சென்று இருப்பது விசாரணையில் தெரியவர சுஷ்மிதா கைது செய்யப்பட்டார்.
சஷ்மிதா சுஷில் ஹரி முன்னாள் மாணவி, இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பிறகும் சிவசங்கர் பாபா பக்தராக அங்கேயே பணிபுரிந்து, குடும்பத்துடன் தங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…