#BREAKING: சிவசங்கர் பாபா சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்..!

Default Image

சிவசங்கர் பாபா மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலிருந்து  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு  மாற்றப்படுகிறார்.

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். நேற்று சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பின்னர், சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் சிவசங்கர் பாபா போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க விசாரிப்பதற்கான மனுவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
suryakumar yadav vk orange cap
Omar Abdullah About Pahalgam Attack
selvaperunthagai
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack