சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ரத்து! ஆட்சியர் அதிரடி உத்தரவு!
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதிவுகளுக்கு மறைமுக தேர்தலை ரத்து. – மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
- அதே போல சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கான தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் ஆளும் அதிமுக கட்சியை விட திமுக கட்சி சற்று அதிகமான இடங்களை கைப்பற்றி இருந்ததது.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு பல இடங்களில் தொடங்கிய நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ரத்து செய்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே இதே சிவகங்கை மாவட்டத்தில், சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் பதவியேற்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததால், சங்கராபுரம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் தேர்தலை ரத்து செய்து ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.