20 நாட்களாக கொரோனா தொற்றில்லா சிவகங்கை.! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கைகள்.!
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக இதுவரை புதிய கொரோனா தொற்று ஏற்படவில்லை.மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், சில மாவட்டங்களில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக பாதிக்காமல் இருந்து வருகிறது. அதில் முக்கியமானது சிவகங்கை மாவட்டம்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக இதுவரை புதிய கொரோனா தொற்று ஏற்படவில்லை.மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். சிவகங்கை மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணிகள் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சார்பாக சுபகார குடிநீர் மற்றும் ஓரக்-டீ பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஓரக் டீ-யானது கிஸ்மிஸ் பழக் கொட்டை, நாட்டு மாதுளை விதை, சுருள் பட்டை, ஓமம், சீரகம், மஞ்சள், கிராம்பு, அதிமதுரம், கோக்கோ பவுடர் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த டீயானது இதயத்தை பலப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறதாம்.