சுதர்சன நாச்சியப்பன் தகுதியான நபர் தான், அவர் கட்சி தலைமை எடுத்த முடிவின்படி நடக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 9 தொகுதிகள் காண வேட்பாளர்களை அறிவித்தது.ஆனால் சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தது. இதற்கு முன்னதாக அந்த தொகுதியில் போட்டியிட்ட சுதர்சன நாச்சியப்பன் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிந்தது.
பின்னர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதன் பின்னர் தற்போது பா.சிதம்பரத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார் சுதர்சன நாச்சியப்பன்.அவர் கூறுகையில், சிதம்பரத்தின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் சிவகங்கை தொகுதி மக்கள் கோபமாக உள்ளனர் என்று கூறினார்.
மேலும் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது என்று அவர் செயல்படுகிறார், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாக வெல்லக்கூடாது அதன் பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் பிரதமர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார் பா.சிதம்பரம் என்று சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
இந்நிலையில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சுதர்சன நாச்சியப்பன் தகுதியான நபர் தான், அவர் கட்சி தலைமை எடுத்த முடிவின்படி நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…