தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா நியமனம்.! வெளியான அதிகாரபூர்வ உத்தரவு.!
தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைமை செயலாளராக பொறுப்பில் இருக்கும் இறையன்புவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனால் புதிய தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கான ஆலோசனையும் சமீப காலமாக தலைமை செயலகத்தில் தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து தற்போது புதிய தலைமை செயலாளராக நகராட்சி துறை கூடுதல் செயலாளராக பொறுப்பில் இருக்கும் சிவதாஸ் மீனா தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த சிவதாஸ் மீனா ஐஏஎஸ் முடித்து காஞ்சிபுரத்தில் தான் உதவி மாவட்ட ஆட்சியராக அரசு பொறுப்பை துவங்கினார். அதன் பிறகு பல்வேறு மத்திய – மாநில அரசு பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் பொறுப்பில் இருக்கும் நகராட்சி துறை செயலாளர் பதவி கார்த்திகேயன் ஐஏஎஸ் அவர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவருக்கான துறை வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தற்போது பொறுப்பில் இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.