சிவசங்கர் பாபாவை இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்..!

Published by
Edison

பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்ட சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை காசியாபாத்தில் இருந்து இரவோடு இரவாக சென்னைக்கு, சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

ஆனால், சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர்,இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து,சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவர,அவர் வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க,அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பினர்.மேலும்,தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக உத்தரகண்ட் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து,டேராடூன் மருத்துவமனையில் இருந்த சிவசங்கர் பாபா சிபிசிஐடி வருவதை அறிந்து மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.பின்னர், நேற்றுகாலை சிவசங்கர் பாபா டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மொட்டை அடித்து அடையாளத்தை மாற்றியிருந்தார்.இதனையடுத்து,அவரை டெல்லி சாகேத் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி தமிழக்திற்கு அழைத்துச் செல்ல சிபிசிஐடி போலீசார் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.இதனால்,சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில்,சிவசங்கர் பாபாவை இரவோடு இரவாக,விமானம் மூலம் சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.மேலும்,வரும் 19 ஆம் தேதியன்று அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Edison

Recent Posts

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

3 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

5 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

5 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

6 hours ago

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

7 hours ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

8 hours ago