நெல்லையில் 12 அடி உயர லெனின் சிலையை திறந்து வைத்த சீத்தாராம் யெச்சூரி
நெல்லையில் லெனினின் 12 அடி உயர வெண்கலச் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திறந்து வைத்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின் திரிபுராவில் லெனின் சிலையை அடித்து நொறுக்கினார்கள். இதற்கு பதிலடியாக திரிபுராவில் வீழ்ந்தது , நெல்லையில் எழுகிறது என்ற வாசகத்துடன் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 12 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று மாலை இந்தச் சிலையை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.