சீர்மிகு நகர திட்டம் : இந்திய அளவில் 8-வது இடமும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்த சேலம் .!

Published by
Ragi

சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்ப்படுத்துவதற்கான தரவரிசை பட்டியலில் 70.7 புள்ளிகளை பெற்று சேலம் மாநகராட்சி தேசிய அளவில் எட்டாமிடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், சீர்மிகு நகர திட்டத்துக்கு சேலம், கோவை, சென்னை உள்பட 100 நகரங்களை தேர்வு செய்தனர். அதில் தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகள் சீர்மிகு நகர வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதில் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தியதை வைத்தும், திட்டப்பணிகளை நிறைவேற்றியதை வைத்தும் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது . இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி வெளியான தரவரிசைப்பட்டியலில் , 70.7 புள்ளிகளுடன் சேலம் மாநகராட்சி தமிழகத்தில் முதலிடத்தையும், இந்திய அளவில் எட்டாமிடத்தையும் பிடித்துள்ளது . கடந்தாண்டு வெளியான தரவரிசை பட்டியலில் சேலம் மாநகராட்சி 50 நகரங்களுக்கு பின்னடைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாநகராட்சி 2016-ல் திட்டப்பணிகளை தொடங்கி 965.87 கோடி ரூபாய் செலவில் 81 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அது முடிவடையவே இரண்டு ஆண்டுகளுக்கு மேலானது . அதனையடுத்து கடந்தாண்டு திட்டப்பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வந்தது . அதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக தடை செய்யப்பட்ட பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது . அதனையடுத்து தொங்கும் பூங்கா உட்பட ஸ்மார்ட் சாலை என பல வளர்ச்சி திட்டப் பணிகளை பல கோடி செலவில் சேலம் மாநகராட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தரவரிசை பட்டியலில் அகமதாபாத் , சூரத், இந்தூர் ஆகிய மூன்று நகரங்கள் முதல் மூன்று இடத்தை அகில இந்திய அளவில் பிடித்துள்ளது . மேலும் இந்த தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் உள்ள ஈரோடு 18வது இடத்தையும், திருப்பூர் மாநகராட்சி 24வது இடத்தையும், திருச்சி மாநகராட்சி 60வது இடத்தையும் பிடித்துள்ளது.

Published by
Ragi

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

6 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

7 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

7 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

9 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

9 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

9 hours ago