மயக்கநிலையில் சின்னதம்பி யானை!!ஒருவழியாக பிடிபட்டது!!
திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கடந்த 25-ம் தேதி கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால்,கடந்த சில நாள்களாக சின்னத்தம்பி யானை தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி சுற்றி வந்தது.
அங்கு வசிக்க விரும்பாத சின்னதம்பி வேறு இடத்திற்கு மாறியது.இதனால் பயிர்கள் உள்ளிட்டவை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
இதற்கு சின்னத்தம்பி என்ற யானையை கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.அதேபோல் வழக்குகளும் தொடரப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.சின்னதம்பியை கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.