திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கண்டரமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திவ்யா என்ற மகளும் , ஸ்ரீ ராம் என்ற மகனும் உள்ளனர். செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் திவ்யா மற்றும் ஸ்ரீராம் இருவரும் அருகில் உள்ள திருமலை ராஜன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி விட்டன. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை நீண்ட நேரத்திற்குப் பிறகு மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தங்கள் மகள் மற்றும் மகன் இருவரும் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் கவிதா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சி செய்தார் அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…