பஸ், ரயில், மெட்ரோவில் செல்ல ஒரே டிக்கெட் முறை – 2024ல் அமல்..!
பஸ், ரயில், மெட்ரோவில் செல்ல ஒரே டிக்கெட் முறை 2024ல் அறிமுகம்.
சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை 2024 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
ஒரே பயணச்சீட்டு முறைக்கு என தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவு செய்த பின் பயணிக்க உள்ள போக்குவரத்து முறைகளை பதிவு செய்ய வேண்டும்.
மூன்று வகையான பயணங்களுக்கு ஒரே பயண சீட்டு அமலாவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டரை தனியார் நிறுவனத்திடம் விட பரிசீலிக்கப்பட்டு வருகிறது.