ஆவினில் ஒரே பதிவெண் கொண்ட வாகன விவகாரம் – ஒப்பந்தம் ரத்து
ஆவினில் ஒரே பதிவெண் கொண்ட வாகன விவகாரத்தில், பாதுகாப்பு நிர்வாகத்திற்கு ஆவின் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து ஆவின் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், சாய்ராம் செக்யூரிட்டி ஏஜென்சி உரிமையாளர் கோபாலுக்கு 2 வாகனங்களை அனுமதித்தது தொடர்பாக ஜூன் 12ம் தேதிக்குள் விளக்கமளிக்க ஆவின் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செக்யூரிட்டி சர்வீஸ் விளக்கமளித்த பிறகு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.