ஒற்றை தலைமை சர்ச்சை – ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ்க்கு ஆதரவு!
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு அதிகரிப்பு.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை தொடரும் நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அதிமுக மாவட்ட செயலாளர் அசோக், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினார். சென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேளதாளத்துடன் 300க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு சென்று மாவட்ட செயலாளர் ஆதரவு தெரிவித்தார்.
இதுபோன்று, ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சர் மைத்ரேயனும் இன்று ஈபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஈபிஎஸ்ஸை சந்தித்து கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி வலுப்பெற்று வருகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் ஈபிஎஸ்க்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6-ஆக சரிந்துள்ளது. அதிமுகவில் 75 மாவட்ட செயலாளர்களில் பெரும்பான்மை, அதாவது 69 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளனர்.