மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி உடல் நலம் தேறி வருகிறது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது என ஸ்டாலின் ட்வீட்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். பின் கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியனை உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், அப்பா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.
இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் “பாடும் நிலா” எஸ் பி பி உடல் நலம் தேறி வரும் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த SPB அவர்கள் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…