சிங்கார சென்னை 2.0 திட்டம் – ரூ.98 கோடி ஒதுக்கீடு!
சென்னையில் புதிதாக பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட 42 பணிகள் மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடற்பாசி பூங்காக்கள் அமைக்க ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையிலும் மூத்த குடிமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலும் பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் உள்ளிட்ட பல வசதிகளுடன் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 11 பூங்காக்கள், 2 விளையாட்டு திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானங்கள், 16 பள்ளிக்கூடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.