தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவை சிபிசிஐடி போலீசார் அச்சுறுத்தியதன் காரணமாக நீக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலக்கியுள்ளது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல அரசியல் பிரமுகர்களும், ரஜினி, கமல் உட்பட அனைத்து பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இந்த விசாரணை சிபிசிஐடி போலீசாரிடமிருந்து சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கருத்து தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தந்தை மகள் விவகாரம் தொடர்பாக பல தகவல்களை வீடியோ மூலம் பாடகி சுசித்ரா வெளியிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோவை நீக்க கோரி சிபிசிஐடி அறிக்கை வெளியிட்டதை அடுத்து சுசித்ரா அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளார். ஆனாலும் பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து வரும் நிலையில் அனைவரும் அதை நீக்க வேண்டும் என்றும், அவை அனைத்தும் உண்மைகள் இல்லை என்றும், போலீசாருக்கு எதிராக தூண்டிவிடுவதாக உள்ளதாகவும், அதை பகிரவோ, நம்பவோ வேண்டாம் கூறி நீக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுசித்ரா கூறியதாவது, தன்னை சிபிசிஐடி போலீசார் அழைத்து போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று கூறி அச்சுறுத்தினார்கள். எனது வக்கீலின் ஆலோசனையின் படி வீடியோவை நீக்கினேன் அவர்கள் அதை கண்டிப்பாக செய்ய துணிபவர்கள். மக்கள் இந்த வழக்கை கவனியுங்கள், ஏனெனில் நிறைய மோசமான வேலைகள் நடந்து வருவதாக கூறியுள்ளார்.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…