எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை
பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது மருத்துவ நிபுணர்கள் தொடர் கண்காணிப்பு.
கடந்த 5-ம் தேதி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியனினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் எஸ். பி. பாலசுப்பிரமணியனின் உடல்நிலை கடந்த 15-ம் தேதி மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும், எஸ். பி. பாலசுப்பிர மணியனின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருவதோடு, அவரது மகனான எஸ். பி. சரணும் வீடியோ மூலம் தந்தையின் உடல்நலம் குறித்து தெரிவித்து வருகிறார்.
நேற்று பிற்பகல் 6 மணி அளவில், விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் பலர் கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதற்கிடையில் அவர் நலம் பெற வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி உடல் நிலை எக்மோ கருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் என மருத்துவ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடபட்டுள்ளது.
எஸ் பி பி உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!#SPBalasubramaniam | #coronavirus pic.twitter.com/3UQX5pCFSc
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 21, 2020