செங்குன்றம் தாமரைப்பக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி. சுப்பிரமணியம் கடந்த 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.பி.பி உடல் நாளை காலை வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தாமரைப்பக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…