BREAKING: தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்.!

சிங்கம்பட்டியின் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல் நலக்குறைவால் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31-வது ஜமீனாக இருந்த முருகதாஸ் தீர்த்தபதி உடல் நலக்குறைவால் காலமானார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழகத்தில், சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையை சேர்ந்த தீர்த்தபதி ஆவார்.
தமிழகத்தில் கடைசி ஜமீனாக சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.