தமிழகம் பாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றிக்கு வழி வகுத்துக்கொடுத்த அனைவருக்கும் நன்றி. தமிழகம் பாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர். எந்த நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து பணியாற்றுவோம்.
அண்ணா, கலைஞர் அவர்கள் பயிற்றுவித்த வழிநின்று மக்கள் கடமையாற்றுவோம். நாளை மறுநாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு சட்டமன்ற தலைவர் தேர்ந்தடுக்கப்படுவார். கொரோனா தொற்று காரணமாக பதவி ஏற்பு விழா எளிமையாக ஆளுநர் அலுவலகத்திலேயே நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…