எளிதாக்கப்பட்ட இபாஸ் முறை.! சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.!
இபாஸ் முறை எளிதாக்கப்பட்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக ரயில்கள், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜூலையில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆறாயிரமாக இருந்த நிலையில் தற்போது ஏழாயிரமாக அதிகரித்துள்ளது. ஏனெனில் இபாஸ் முறை தமிழகத்தில் எளிதாக்கப்பட்டதை அடுத்து ஒரு நாளில் மட்டும் வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை ஐம்பதில் இருந்து எண்பதாக அதிகரித்துள்ளது அதிலும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி 81 விமானங்கள் இயக்கப்பட்டு 8,067 பேர் பயணம் செய்துள்ளதாகவும், அதில் பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் 4,617 பேர், சென்னையிலிருந்து புறப்பட்டு பிற இடத்திற்கு சென்றவர்கள் 3,450 பேர் என்று கூறப்படுகிறது. இபாஸ் முறையாக எளிதாக்கப்பட்டதால் இனி வரும் தினங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.