சிலம்பக் கலை பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன்
சிலம்பக்கலை பயிற்சி பள்ளி படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழகத்தில் சிலம்பக் கலை பயிற்சி பள்ளி படிப்படியாக தொடங்கப்படும் என்றும் சிலம்பக் கலைக்கு முன்னுரிமை தந்து அதனை வளர்க்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சேதமடைந்த பள்ளி கட்டட விவரம் கணக்கெடுக்கப்பட்டு விரைவில் புதிய கட்டங்கள் கட்டப்படும் என்றும் குறிப்பிட்டார்.