சிக்னல் கோளாறு… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

metro train

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க பாதையில் கோளாறு ஏற்பட்டது. இந்த நிலையில், சுரங்க பாதையில் ஏற்பட்ட கோளாறு இன்னும் சரி ஆகாததால், தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.

இதனால், ஒரு வழித்தடத்தில் மட்டும் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் தொடர்ந்து ரயில்கள் தாமதமாகி வரும் நிலையில், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனிடையே, இரவில் இருந்து தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில், தொடர்ந்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது, நீல வழித்தடத்தில், சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை இடையே 18 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, டோல்கேட் முதல் விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியில் இயங்குகிறது.

மேலும், விமான நிலையம் – சென்னை சென்ட்ரல் இடையே 7 நிமிட இடைவெளியிலும், விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்