சென்னை போரூரை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஒய்ஜி மகேந்திரன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம், என்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். பல்படி சரியில்லை என்றால் கூட போராட்டம் நடத்துகின்றனர். பின்னர் சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்களை நடத்தி வள்ளுவரை சாகடிக்கின்றனர் என்று கூறினார்.
இந்நிலையில், தொடர்ந்து பேசிய அவர் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் 25% பேர் போராட்டம் குறித்து அறிவுடன் போராடுகின்றனர். மீதமுள்ள 75% பேர் விடுமுறை கிடைக்கும் எனவும், கலாட்டா செய்யவும் தான் போராடுகின்றனர். பிறகு பெண்களை சைட் அடிப்பதற்கும் போராட்டத்திற்கு செல்கின்றனர். மேலும் படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாதது எனவும், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் எதாவது குறைகள் இருந்தால் அதை நியாயமான முறையில் கேட்க வேண்டும். கல் எறிவது , பேருந்துகளை எரிப்பது, கலவரம் உண்டாக்குவது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது என இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.
சென்னை : நேற்று மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.…
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில்…
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…