ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
சட்ட பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும். 4 மாதத்திற்கு முன்னால் ஆளுநர் மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டார்; அதற்கும் பதில் அனுப்பப்பட்டது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்; இதற்காக 400 படுக்கைகளுடன் 6 தளங்கள் கொண்டதாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கியுள்ளது. அனைத்து வசதிகளுடன் விரைவில் இயங்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.