சித்த மருத்துவர் சர்மிகா எழுத்துப்பூர்வ பதில் கூற இன்றுடன் கடைசி நாளாக இருந்த நிலையில் அவர் கேட்டுக்கொண்டதன் பெயரில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தனது பல்வேறு நேர்காணல்களில் பல்வேறு கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டவர் சித்த மருத்துவர் ஷர்மிகா. அவர் கூறிய குலாப் ஜாமூன் சாப்பிட்டால் எடை கூடும் என்ற கருத்து, குழந்தை பிறப்பது குறித்தும், நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு நல்லது என்றும் அவர் கூறிய பல்வேறு கருத்துக்கள் மருத்துவர்களையே சற்று ‘ஜெர்க்’ ஆக வைத்து விட்டன என்றே கூறலாம்.
தன்னிலை விளக்கம் : தன்னை பற்றிய சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவரே தன்னிலை விளக்கம் ஒன்றை அறிவித்து இருந்தார். அதில், நான் தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டேன். எனது மூளையில் பிரச்சனை இல்லை. நமக்கு ஆயிரம் வேலை இருக்கு என கூறினால் ஆயிரம் வேலை இருப்பதாக அர்த்தம் இல்லை. அது போல தான் நான் சிறியதாக கூறியது இங்கு பெரிய பேசுபொருளாக மாறிப்போனது என குறிப்பிட்டு இருந்தார்.
எழுத்துப்பூர்வ விளக்கம் : இருந்தும், மருத்துவ இயக்குநகரத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அண்மையில் நேரடியாக வந்து விளக்கம் கூறினார். அதனை தொடர்ந்து அவர் வாய்மொழி விளக்கமாக கூறிய அத்தனையும் எழுத்துபூர்வமாக எழுதி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ இயக்குநரகம் கூறியிருந்தது.
அதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து எழுத்து பூர்வ விளக்கத்திற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிய காரணத்தால் வரும் 24ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய மருத்துவ இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…