நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியிருந்தது.
வழிப்பறி,கொள்ளை வழக்கு:
தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக,திண்டுக்கல் மாவட்டத்தில் அவர்மீது வழிப்பறி,கொள்ளை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
தப்ப முயற்சி:
இதனையடுத்து,அவரை கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட எஸ்.ஐ இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் நெல்லையில் முயற்சித்தபோது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்றதால் இந்த என்கவுண்டர் நடந்ததாகவும்,மாறாக திட்டமிட்டு இது நடத்தப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு:
இந்நிலையில்,நீராவி முருகனை பிடிக்க சென்றபோது பழனி எஸ்.ஐ இசக்கிராஜா உட்பட 3 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகநெல்லை எஸ்.பி சரவணன் கூறுகையில்:நீராவி முருகனை பிடிக்க திண்டுக்கல் மாவட்டம் தனிப்படை போலீசார் நெல்லை சென்றிருந்தனர்.இந்த நிலையில்,நீராவி முருகனை பிடிக்க முயன்றபோது அவர் அரிவாளால் 3 காவலர்களை தாக்கியதன் காரணமாக,தற்காப்புக்காக முருகனை ஒரு முறை சுட்டதாகவும்,ரவுடி முருகன் தாக்கியதில் நான்கு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நீராவி முருகன் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…
சென்னை: கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், தனியார் பேருந்து…