திமுக, காங்கிரஸ் தீவிரவாதிகளுடன் கூட்டா?.. வில்சன் கொலைக்கு கண்டனத்தை கூட பதிவு செய்யாதது ஏன்.. சாட்டையடி கேள்வி..
- உதவி ஆய்வாளர் வில்சன் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதற்க்கு கண்டனம் தெரிவிக்காத திமுக,காங்கிரஸ்.
- இவர்கள் கூட்டணியில் பயங்கரவாதிகளும் உள்ளனர் போலும் என்று சாட்டையடி விமர்சனம்.
கன்னியாகுமரி மாவட்த்தில் உதவிஆய்வாளர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே அதிச்சிக்குள்ளாகியது. இது குறித்து கருத்து கூறிய முன்னால் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் அவ்ர்களின் குடும்பத்திற்க்கு 1 கோடி ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது என அவர் தெரிவித்தார். இது, திமுக,காங்கிரஸ் கூட்டணியில் பயங்கரவாதிகளும் கூட்டணி வைத்து இருப்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த குற்றச்சாட்டு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.