சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு..பதற வைக்கும் தீவிரவாதிகளின் திட்டம்.. தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமா?.. குமுறும் மக்கள்..

Published by
Kaliraj
  • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்த தீவிரவாதிகள் வாக்குமூலம்.
  • தமிழகத்தையே அதிரவைக்கும் தீவிரவாதிகளின் பேச்சு.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தீவிரவாதிகள் எஸ்ஐ வில்சனை கொலைசெய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.அதில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமாரை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அப்துல் சமீமுக்கு சிறையில் இருந்தபோது பல தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.பின் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி 17 பேர் அதில் செயல்பட்டுள்ளனர்.

Image result for si wilson death tamil nadu

அதற்க்கு  காஜா முகைதீனை தலைவராக கொண்டு செயல்பட வேண்டும் எனவும் திட்டமிட்டு உள்ளனர். காஜா முகைதீனுக்கு வெளிநாடுகளில் இருந்து தாராளமாக நிதி உதவி கிடைத்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மும்பையில் தங்கி இருந்து பல்வேறு சதி திட்டங்கள் தீட்டியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், காஜா முகைதீன் கைது செய்யப்பட்ட பிறகு இந்த அமைப்பை சேர்ந்த பலரும் பல்வேறு வழக்குகளில்  தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாமைப்பில் மொத்தம் உள்ள 17 பேரில் 15 பேரை காவல்துறையினர் சென்னை, டெல்லி, கர்நாடக ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்ததாக கூறப்படுகிறது. அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர் மட்டுமே வெளியில் இருந்துள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த இயக்கத்துக்கும், தங்களுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துரையினருக்கு தங்களது எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று அப்துல் சமீமும், தவுபிக்கும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 8-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த இடத்தை தவுபிக்தான் தேர்வு செய்ததும் என்பதும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது. வில்சனுக்கும், பயங்கரவாதிகள் 2 பேருக்கும் இடையே எந்த முன்விரோதமும் இல்லை என்று தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். அந்த சோதனைச்சாவடியில் சம்பவத்தன்று எந்த காவல்துறை அதிகாரிகள்  பணியில் இருந்தாலும் கொலை செய்திருப்போம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். எங்களது நோக்கம் காவல்துறையினருக்கு எதிரான எங்கள்  எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காகத்தான் இந்த கொலையை செய்ததாக அந்த தீவிரவாதிகள் கூறியுள்ளனர். இதற்காக ஏற்கனவே 2 பேரும் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டதாகவும்,  ஆனால் யார் அந்த பயிற்சியை அளித்தது என்பதை தெரிவிக்க அந்த தீவிரவாதிகள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்க்காக  தாங்கள் கொலை செய்யப்பட்டாலும் அதற்காக நாங்கள்  கவலைப்பட போவதில்லை என்றும், தங்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு யாருக்கும் தங்களது அமைப்பு ரீதியான தொடர்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறதா என்ற கேள்வி பலரையும் துளைத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்யாமல் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர், இந்த விவகாரத்தில் தமிழக எதிர்கட்சியின் சார்பில் எந்த கண்டனமும் பதிவு செய்யப்படாதது தமிழக மக்களிடையே அந்த கட்சிகளின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

2 hours ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

2 hours ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

2 hours ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

2 hours ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

3 hours ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

3 hours ago