சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு..பதற வைக்கும் தீவிரவாதிகளின் திட்டம்.. தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமா?.. குமுறும் மக்கள்..
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்த தீவிரவாதிகள் வாக்குமூலம்.
- தமிழகத்தையே அதிரவைக்கும் தீவிரவாதிகளின் பேச்சு.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தீவிரவாதிகள் எஸ்ஐ வில்சனை கொலைசெய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.அதில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமாரை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அப்துல் சமீமுக்கு சிறையில் இருந்தபோது பல தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.பின் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி 17 பேர் அதில் செயல்பட்டுள்ளனர்.
அதற்க்கு காஜா முகைதீனை தலைவராக கொண்டு செயல்பட வேண்டும் எனவும் திட்டமிட்டு உள்ளனர். காஜா முகைதீனுக்கு வெளிநாடுகளில் இருந்து தாராளமாக நிதி உதவி கிடைத்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மும்பையில் தங்கி இருந்து பல்வேறு சதி திட்டங்கள் தீட்டியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், காஜா முகைதீன் கைது செய்யப்பட்ட பிறகு இந்த அமைப்பை சேர்ந்த பலரும் பல்வேறு வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாமைப்பில் மொத்தம் உள்ள 17 பேரில் 15 பேரை காவல்துறையினர் சென்னை, டெல்லி, கர்நாடக ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்ததாக கூறப்படுகிறது. அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர் மட்டுமே வெளியில் இருந்துள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த இயக்கத்துக்கும், தங்களுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துரையினருக்கு தங்களது எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று அப்துல் சமீமும், தவுபிக்கும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 8-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்திருக்கிறார்கள்.
இந்த இடத்தை தவுபிக்தான் தேர்வு செய்ததும் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வில்சனுக்கும், பயங்கரவாதிகள் 2 பேருக்கும் இடையே எந்த முன்விரோதமும் இல்லை என்று தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். அந்த சோதனைச்சாவடியில் சம்பவத்தன்று எந்த காவல்துறை அதிகாரிகள் பணியில் இருந்தாலும் கொலை செய்திருப்போம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். எங்களது நோக்கம் காவல்துறையினருக்கு எதிரான எங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காகத்தான் இந்த கொலையை செய்ததாக அந்த தீவிரவாதிகள் கூறியுள்ளனர். இதற்காக ஏற்கனவே 2 பேரும் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டதாகவும், ஆனால் யார் அந்த பயிற்சியை அளித்தது என்பதை தெரிவிக்க அந்த தீவிரவாதிகள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்க்காக தாங்கள் கொலை செய்யப்பட்டாலும் அதற்காக நாங்கள் கவலைப்பட போவதில்லை என்றும், தங்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு யாருக்கும் தங்களது அமைப்பு ரீதியான தொடர்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறதா என்ற கேள்வி பலரையும் துளைத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்யாமல் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர், இந்த விவகாரத்தில் தமிழக எதிர்கட்சியின் சார்பில் எந்த கண்டனமும் பதிவு செய்யப்படாதது தமிழக மக்களிடையே அந்த கட்சிகளின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.