சுட்டும், குத்தியும் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வளர் குடும்பத்திற்க்கு முதல்வர் இரங்கல் மற்றும் ஒரு கோடி நிதியுதவி..

- துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு இரங்கல்.
- மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி ரூபாய் நிதியுதவி.
கடந்த 8.1.2020 அன்று மர்ம நபர்கள் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்கள் உயிரிழந்தார். இந்த குமரி – களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்களின் கொலை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க செய்தது. இந்த கொலைக்கு தமிழக அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழக டிஜீபி நேரில் சென்று இந்த கொலை குறித்து விசாரித்தார். இந்நிலையில் இறந்த உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆறுதல் கூறியும், மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். இனி இதுபோன்று நம்மை காக்கும் எல்லை சாமிகளுக்கு நிகழக்கூடாதென்றும், இந்த கொலைக்கு காரணமான கயவர்களை தமிழக அரசு இரும்பூ கரம் கொண்டு அடக்கவேண்டும் என தமிழக மக்கள் கருதுகின்றனர்
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025