நாகை மாவட்டம் மயிலாடுதுறை சார்ந்தவர் கனிமொழி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகை மாவட்டம் திட்டச்சேரி உதவி ஆய்வாளராக வேலைசெய்து வருபவர் விவேக் ரவிராஜ்.இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தது மூலம் அப்பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதை அறிந்த விவேக் அப்பெண்ணிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்வதாக கூறி கருவை கலைக்க வற்புறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் இருவரும் சென்று கருவை கலைத்தனர். பிறகு அப்பெண்ணிடம் பேசுவதை விவேக் குறைத்துள்ளார். சந்தேகம் அடைந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த காவல் அதிகாரி விவேக் கொச்சை வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் நடந்ததை வெளியில் கூறினால் குடும்பத்துடன் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விவேக் மிரட்டல் தொடர்பாக அப்பெண் நாகை மற்றும் சென்னை காவல்துறை அலுவலகங்களில் புகார் அளித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த விவேக் மயிலாடுதுறையில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் சில ரவுடிகளை அனுப்பி வைத்து புகாரை வாபஸ் பெற வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததாக அப்பெண் கூறியுள்ளார்.
தன்னை காதலித்து ஏமாற்றியதும், சட்டவிரோதமாக கருவை கலைத்தது , கொலை மிரட்டல் அனைத்து விதமான ஆதாரங்கள் இருந்தும் உதவி ஆய்வாளர் மீது காவல் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பெண் கூறுகிறார்.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…