தமிழகம் முழுவதும் எஸ்ஐ பணிக்கான தேர்வு தொடங்கியது..!!!

Default Image
  • தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான தேர்வு துவங்கியது.
  • தமிழகம் முழுவதும் 32 மையங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 448 பேர் தேர்வை எழுதுகின்றனர்.

 

தமிழக காவல் துறையில் 969 உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வினை  தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.இதனிடியயே இன்று பொதுப்பிரிவினருக்கு மட்டும் நடைபெறுகிறது. நாளை காவலர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்த தகுதி படைத்த தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் பல சோதனைக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். நாளை நடைபெறும் தேர்வில் காவல் துறையைச்சேர்ந்த ஆயிரத்து 145 ஆண்கள் மற்றும் 190 பெண்கள் என மொத்தம் ஆயிரத்து 335 பேர் தேர்வை எழுத உள்ளனர்.

இன்று நடைபெறும் பொதுப்பிரிவில் 969 பணி இடங்களுக்கு மட்டும் தமிழகம் முழுவதும் 32 மையங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 448 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்