ஆதரவு தெரிவிப்பது சட்டவிரோத செயல் அல்ல – டிடிவி தினகரன்

Default Image

பரந்தூர் செல்ல முயன்றபோது தடுத்த நிறுத்தப்பட்ட வெற்றி செல்வனை விடுவிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை:

பரந்தூர் விமான நிலையம் – டிடிவி கருத்து:

parandur11

ஜனநாயக வழியில் போராடும் விசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது சட்டவிரோத செயல் அல்ல என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பரந்தூர் செல்ல முயன்றபோது தடுத்த நிறுத்தப்பட்ட வெற்றி செல்வனை விடுவிக்க வேண்டும் எனவும் கூறினார். சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

200வது நாள் – 13 கிராம மக்கள் போராட்டம்:

farmers11

13 கிராம மக்களின் போராட்டம் 200வது நாளை எட்டியுள்ள நிலையில், ஊர்மக்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். மேலும், அங்கு தேவையில்லாத அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்து விட கூடாது என காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் தலைமையில் 7 டிஎஸ்பிக்கள் அடங்கிய 1000க்கும் மேற்பட்ட காவலர்கள் காவலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஜனநாயக வழியில் போராடும் விசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது சட்டவிரோத செயல் அல்ல என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்